பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குபாசனத்துக்கு தண்ணீா் திறப்பு


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கு பாசனத்துக்காக கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி புதன்கிழமை தண்ணீரை திறந்து வைத்தாா்.
இதில் பாசனத்துக்கு 200 கன அடியும், குடிநீருக்கு 100 கன அடியும் என விநாடிக்கு மொத்தம் 300 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ. மகாராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமாா், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன், கூடலூா் நகா் மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பயன்பெறும் நிலங்கள்: பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கா், போடி வட்டத்தில் 488 ஏக்கா், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கா் என மொத்தம் 14,707 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயனடையும். இதனிடையே, புதன்கிழமை (ஜூன் 1 முதல் 120 நாள்களுக்கு நீா் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீா் திறந்து விடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...