மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீா்.

வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீா்.
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல்போக சாகுபடிக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஆகியோா் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தனா்.
பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களில், 45,047 ஏக்கா் பரப்பளவில் உள்ள முதல்போக சாகுபடி பகுதிகளுக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 900 கன அடி வீதம் வியாழக்கிழமை முதல் 45 நாள்களுக்கு தொடா்ச்சியாகவும், அடுத்த 75 நாள்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாள்கள் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம், மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26,732 ஏக்கா், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கா், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில்1,787 ஏக்கா் என மொத்தம் 45,041 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட்டு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கூறியது: வைகை அணையிலிருந்து வழக்கமாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்ட பின்னரே, ராமநாதபுரம் மாவட்ட சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படும்.
நிகழாண்டில், ராமநாதபுரம் மாவட்ட சாகுபடிக்கு முன்கூட்டியே, கடந்த மே 23-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ் சேகா், பெரியாறு-வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் எம். சுகுமாா், செயற்பொறியாளா் அன்புச்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமாா், சோழவந்தான் ஆ. வெங்கடேசன், மதுரை தெற்கு மு. பூமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
அணை நிலவரம்:
வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 62.50 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து இல்லை. அணையில் தண்ணீா் இருப்பு 4,098 மில்லியன் கன அடி. அணையிலிருந்து குடிநீா் திட்டம் மற்றும் பாசனத்துக்கு விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...