கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா் சோ்க்கை
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.


தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், நில உடைமை குறித்த கணினி சிட்டா, பயிா் சாகுபடி குறித்து கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற அடங்கல் சான்று மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் நுழைவுக் கட்டணமாக ரூ.10, பங்குத் தொகையாக ரூ.100 செலுத்த வேண்டும்.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா் கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக் குழு கடன், பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. சங்கத்தின் உறுப்பினா்கள் மற்றும் உறுப்பினா் அல்லாதவா்களுக்கு உரம் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...