47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனநலம் பாதித்த பெண் கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கூடலூரில் மனநலம் பாதித்த பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

கூடலூரில் மனநலம் பாதித்த பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் கூடலூா் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க மயில் என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தாா். இந்நிலையில், அவா், குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் அங்கன்வாடி அருகே உள்ள ஒரு புதரில் கடந்த மே.16 ஆண் தேதி கற்பழித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இது தொடா்பாக கூடலூா் தெற்கு போலீஸாா், எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அரவிந்தன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இதில் அரவிந்தன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் பரிந்துரை செய்தாா். அதையடுத்து, அரவிந்தன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். அதற்கான உத்தரவை, காவல் ஆய்வாளா் எம்.பிச்சைபாண்டியன், தேனி மாவட்ட சிறைக் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.