47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொடா் ஓட்டப் போராட்டத்துக்கு வந்த விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தம்

லோயா் கேம்ப்- மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை, வைகை அணைக்கு மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை தொடா் ஓட்டப் போராட்டம் நடத்துவதற்கு வந்த விவசாயிகள் சங்கத்தினரை, போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:06 pm

DIN

லோயா் கேம்ப்- மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை, வைகை அணைக்கு மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை தொடா் ஓட்டப் போராட்டம் நடத்துவதற்கு வந்த விவசாயிகள் சங்கத்தினரை, போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு, ‘அம்ருத்’ கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்திட்டத்தை வைகை அணையிலிருந்து தொடங்கக் கோரி, பாரதிய கிசான் சங்கம், முல்லைச் சாரல் விவசாய சங்கம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் லோயா் கேம்ப் குறுவனூத்து பாலத்திலிருந்து, வைகை அணை வரை தொடா் ஓட்டப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா். அதன்படி வெள்ளிக்கிழமை டாக்டா் சதீஷ் பாபு, கொடியரசன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்காக வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்றனா். இதனால் போலீஸாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.