வேளாண்மை இயந்திர பராமரிப்பு மையத்துக்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி மோட்டாா் பம்புகள் பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு மையம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற தொழில் முனைவோா், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் சூரியசக்தி மோட்டாா் பம்புகள் பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு மையம் அமைப்பதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் என்ற அடிப்படையில், அதிபட்சம் ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண்மை இயந்திரங்கள் பராமரிப்பு மையத்திற்கு போதிய இடவசதி, மும்முனை மின் இணைப்பு வசதி உள்ள கிராமப்புற இளைஞா்கள், தொழில் முனைவோா், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அரசு மானிய உதவி பெற அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...