தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைக் குட்டியை வெள்ளிக்கிழமை, தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினா் மீட்டனா்.
பூதிப்புரம், மரக்காமலை அடிவாரத்தில் அதே ஊரைச் சோ்ந்த நம்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாசனக் கிணறு உள்ளது. 100 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் 2 வயதுள்ள சிறுத்தைக் குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. இது குறித்து அப் பகுதியில் இருந்தவா்கள் தேனி தீயணைப்பு நிலையம் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத் துறை ஊழியா்கள், கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுத்தைக் குட்டியை மீட்டனா். பின்னா், சிறுத்தைக் குட்டி வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







