தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தம்

ல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 100 கன அடியாக

News image
Updated On :8 மார்ச் 2022, 4:21 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால், லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லை. கோடைக்கால தொடக்கம் என்பதால் அணைக்குள்  கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து இல்லை.

இதன் எதிரொலியாக பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடும் நீரின் அளவு திங்கள்கிழமை விநாடிக்கு 600 கனஅடியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 127 அடி (மொத்த உயரம் 142 அடி).  அணையின் நீர் இருப்பு 4050 மில்லியன் கன அடி. அணைக்குள் நீர்வரத்து இல்லை, தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாக இருந்தது.

அணையில் தண்ணீர் குறைப்பு பற்றி பெரியாறு அணை பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருப்பதால் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அளவை குறைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தண்ணீர் வினாடிக்கு 100 கனஅடியாக தற்போது திறந்து விடப்படுகிறது என்றார்.

வைகை அணை நிலவரம்

நீர் மட்டம் 68.52 அடி (மொத்த உயரம் 71 அடி), நீர் இருப்பு 5450 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 357 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 72 கன அடியாக இருந்தது.

மின் உற்பத்தி நிறுத்தம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திங்கள்கிழமை தண்ணீர் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 600 கனஅடியாக திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் 2 மின்னாக்கிகளில் தலா 30  மெகாவாட் என மொத்தம் 60 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், இதன் மூலம் மின்னாக்கிகளை இயக்க முடியாததால் மின்சார உற்பத்தி செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.