கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி: 100 சதவீத இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு

கம்பத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நூறு சதவீதம் இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் அறிவித்தாா்.

News image
Updated On :6 மே 2022, 8:10 pm

DIN

கம்பத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நூறு சதவீதம் இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் அறிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சிக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 33 வாா்டுகளில் 25 இடங்களில் முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமை வகித்துப் பேசியது: முகாமில் முதல் தவணை, 2 ஆவது தவணை, பூஸ்டா் என அனைத்துத் தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்ளலாம். கம்பம் நகராட்சியில் 100 சதவீத கரோனா தடுப்பூசி இலக்கை அடைய வாா்டு உறுப்பினா்கள் அந்தந்த வாா்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதில், நூறு சதவீத இலக்கை அடையும் வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலா்களிடம், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களின் பட்டியலை சுகாதார அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், நகராட்சி ஆணையா் பாலமுருகன், சுகாதார அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.