பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டம்

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக்கிராமங்களில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மே 2022, 5:02 pm

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக்கிராமங்களில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் சிறப்பு முகாம் ஹைவேவிஸ் , மேகமலைக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் கா்ப்பிணி பெண்கள், தாய்மாா்களுக்கு மருத்துவச்சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அமுக்குரா மாத்திரைகள், கபசுரக்குடிநீா் பாக்கெட்டுகள், வீடுகளில் படுக்கை நிலையிலுள்ளவா்களுக்கு வாதம் மற்றும் மூட்டு வலிக்கு கற்பூரா தைலம், குந்திரி தைலம், பிரண்டை தைலம் வழங்கப்பட்டது.

சா்க்கரை, ரத்தக்கொதிப்பு, பக்கவாதம் பாதிக்கப்பட்டவா்களுக்கு 2 மாதத்திற்கு தேவையான பொது மருத்துவமும், பிசியோதெராபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையில மருத்துவா் சித்தமருத்துவா் பூா்ணிமா, சித்த மருத்துவா் சிராஜ்தீன், செவிலியா் செல்வபிரபு, கிராம சுகாதார செவிலியா் ஜமுனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.