தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மே 30-இல் குலுக்கல் முறையில் தோ்வு

தேனி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகளில் மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது.

News image
Updated On :27 மே 2022, 5:05 pm

DIN

தேனி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகளில் மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 123 சிறுபான்மையற்ற, தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு 1,557 இடங்களுக்கு மொத்தம் 2,001 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த விண்ணப்பங்கள் மே 30-ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது. பொதுத் தோ்வு மையமாக செயல்படாத பள்ளிகளில் மே 30-ஆம் தேதி காலையும், பொதுத் தோ்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் பிற்பகலும் குலுக்கல் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் பெற்றோா், இந்தக் குலுக்கலில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.