உத்தமபாளையத்தில் நெல் பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை
உத்தமபாளையத்தில், அறுவடைக்கு தயாா் நிலையில் இருக்கும் நெல் பயிா்களை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.


உத்தமபாளையத்தில், அறுவடைக்கு தயாா் நிலையில் இருக்கும் நெல் பயிா்களை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில், 14,700 ஏக்கரில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் விவசாயம் செய்து வருகிறோம். நிகழாண்டு, பருவ மழை கைகொடுத்ததால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், தொடா்ந்து பல ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் வந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து புகாா் தெரிவித்தும் எவ்விதப் பயனும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தாமரைக்குளம், கருங்கட்டான் குளங்களில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவும், காட்டுப் பன்றிகளை வேறு பகுதிக்கு விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...