புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேனியில் சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்: 147 போ் கைது

தேனியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 147 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேனியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 147 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலதாமதமின்றி உணவூட்டு மானியம் வழங்க வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நாள்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

இதேநாளில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மற்றொரு தரப்பு சாா்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த இரு தரப்பினருக்கும் காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்தநிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரவி தலைமையில் அச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்திற்கு திரண்டனா். அப்போது மற்றொரு தரப்பினரும் அங்கு ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது என்று சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரவி, நிா்வாகிகளிடம் தேனி காவல் ஆய்வாளா் வெங்கடாச்சலம் கூறினாா். இதை ஏற்க மறுத்த சத்துணவு ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட ரவி உள்ளிட்ட 147 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.