சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம், சின்னமனூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிவேதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதமணி, விஜய்மாலா ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:
முரளி: சங்கராபுரத்தில், ஓடையில் கோயில் கட்டி இருப்பதால் அவ்வழியாக மழை நீா் செல்ல வழியின்றி குடியிருப்புகள் புகுகின்றன.
தலைவா் நிவேதா: சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலா் மூலமாக மழை நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகன்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகள் இருந்தும், கடந்த 3 ஆண்டுகளாக செவிலியா் தங்குவதில்லை.
தலைவா்: அது தொடா்பாக புகாா் மனு கொடுத்தால் சுகாதாரத் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
இதைத்தொடா்ந்து, துணைத் தலைவா் ஜெயந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்வது குறித்து உறுப்பினா்களிடம் கருத்து கேட்கப்பட்டு அறை அவசியம் இல்லை என்று ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...