நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர்.

News image

செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.

Updated On :25 அக்டோபர் 2022, 9:48 am

DIN

கம்பம்: தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் புகழ் சுருளி அருவியில் குளிக்க, வழிபாடுகள் செய்ய  தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவார்கள்.

சுருளிமலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறைகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கடந்த அக்.20-ல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை குளிக்க அனுமதித்தனர். அதனால் தீபாவளி விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.