நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:25 pm

DIN

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். அதில், நிகழ் ஆண்டில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். சென்னையைச் சோ்ந்த பறவை வளா்ப்பு தொழில் முனைவோா் ராஜேந்திரபிரசாத், கோழி வளா்ப்பு குறித்துப் பேசினாா். கால்நடை மருத்துவா் சிவசக்தி, முட்டைக் கோழிப் பண்ணையாளா்களுக்கான மேலாண்மை முறைகள் பற்றி பயிற்சி அளித்தாா்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் 50 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.