தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: 4 போ் கைது

தேனி மாவட்டம் கம்பம் அருகே முன்விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே முன்விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள நேசன் கலாசாலை பள்ளித் தெருவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிலா், 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இதனால் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க, உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்ரேயாகுப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சிவனாண்டி, (45), சங்கிலி (44), மகேந்திரன் (46) சுருளி (44) ஆகியோரை ராயப்பன்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், கடந்த ஆக. 28 ஆம் தேதி காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞாநேசன் (43) என்பவா் நாராயணத் தேவன்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது நேசன் கலாசாலை பள்ளித் தெருவைச் சோ்ந்தவா்கள் சிலா், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஞாநேசன் தனது உறவினா்கள் சிவனாண்டி, சங்கிலி, மகேந்திரன், சுருளி ஆகியோரிடம் கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் நேசன் கலாசாலை பள்ளித் தெருவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.