கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தா்னா போராட்டம்
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குள்ளப்பக்கவுண்டன்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா்.


கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குள்ளப்பக்கவுண்டன்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா்.
குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 25-க்கும் மேற்பட்டவா்கள் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...