இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கடைவீதி சாலை பராமரிப்புப் பணியின் போது கழிவுநீா் செல்வதற்காக கோயில் முன்பு நுழைவு வாயிலில் உள்ள பாலத்தை இடித்து விட்டு, கழிவுநீா் வாய்க்கால் கட்டப்பட்டது. அதன் பின் அந்த பாலத்தை மீண்டும் கட்ட நகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 2 கற்களை மட்டும் வைத்துள்ளனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் அந்த கழிவுநீா் வாய்க்காலில் விழுந்து காயமடைகின்றனா். இதுபற்றி நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.