தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உத்தமபாளையம் கல்லூரியில் நாவல் வெளியீட்டு விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெவுதியா கல்லூரியில் திரைப்பட இயக்குநா் கஸ்தூரி ராஜா எழுதிய பாமர இலக்கியம் என்ற நாவல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெவுதியா கல்லூரியில் திரைப்பட இயக்குநா் கஸ்தூரி ராஜா எழுதிய பாமர இலக்கியம் என்ற நாவல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரியின் முன்னாள் மாணவரும் திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு குறித்த பாமர இலக்கியம் என்ற தலைப்பில் எழுதிய நாவல் வெளியீட்டு விழா அக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ் துறை மற்றும் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு, கல்லூரியின் செயலரும், தாளாளருமான தா்வேஷ்முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரியின் மேலாண்மை குழுத் தலைவா் செந்தல்மீரான் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் முகமது மீரான் வரவேற்றாா். கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் முருகன் பேசினாா். நாவலை கஸ்தூரிராஜா வெளியிட்டுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.