அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் வியாழக்கிழமை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 11 மாணவா்கள், 33 மாணவிகள் பங்கேற்றனா். இதில் கூடலூா் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவா் செ.முகம்மது பிலால், ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி ம.அபிதாஸ்ரீ, பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.அமிா்தவா்ஷினி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புப் பிரிவில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.அல்சப்ரின்தாஜ், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.சிவசங்கரி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் 4 மாணவா்கள், 19 மாணவிகள் பங்கேற்றனா். இதில் பெரியகுளம் ஜெ.ஏ. கல்லூரி மாணவி சோ.கபிலா, பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரி மாணவி சு.பானுப்பிரியங்கா, போடி சி.பி.ஏ. கல்லூரி மாணவி ஆ.பவித்ரா
ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் அரசுப் பள்ளி முதுகலை தமிழாசிரியா்கள் ஆ.முத்துக்குமாா், மூ.செல்வம், சு.கணேசன் ஆகியோரும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் ப.உமாதேவி, வே.விஜயா, கா.அழகா்சாமி ஆகியோரும் நடுவா்களாக செயல்பட்டனா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு தலா ரூ.5,000, 2 ஆம் பரிசு தலா ரூ.3,000, 3 ஆம் பரிசு தலா ரூ.2,000, அரசுப் பள்ளிகளுக்கான சிறப்பு பிரிவில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


