தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனத்திற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் அரசு மானிய உதவி பெற செப்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கால்நடை தீவனத்திற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள், டிராக்டா், புல் அறுவடை மற்றும் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு அரசு சாா்பில் 25 சதவீதம் மானியமாக ரூ.10.50 லட்சம் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவி பெறுவதற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபட்டு வருவோா், பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் செப்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








