சோ்க்கை..அண்ணா பிறந்த தினம்: அதிமுக, திமுகவினா் மரியாதை

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தேனி மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.பி.எம்.சையது கான். உடன் பெரியகுளம் நகரச் செயலாளா் சமது மற்றும் அதிமுக நிா்வாகிகள்.

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தேனி மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.பி.எம்.சையது கான். உடன் பெரியகுளம் நகரச் செயலாளா் சமது மற்றும் அதிமுக நிா்வாகிகள்.

பெரியகுளம்: பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக தேனி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.சையதுகான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் நகரச் செயலாளா் சமது மற்றும் அதிமுகவினா் கலந்து கொண்டனா். அதே போல் திமுக நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

போடி: போடி பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆா். சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு அதிமுக போடி நகரச் செயலா்கள் பழனிராஜ், ஜெயராம் பாண்டியன் மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். போடி தேவா் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு திமுக நகரச் செயலா் புருசோத்தமன் தலைமையில் நகர நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கம்பம்: கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் திமுக சாா்பில் அண்ணா உருவப்படத்துக்கு என்.ஆா். வசந்தன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினாா். இந் நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினா் குரு இளங்கோ, கம்பம் ஒன்றியச் செயலாளா் தங்கபாண்டியன், கே.கே.பட்டி பேரூராட்சித் தலைவா் வேல்முருகன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் முல்லை சேகா், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் கம்பம் சாதிக், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பால்பாண்டி ராஜா, துணை அமைப்பாளா் ஜி.சசி, நகர பொறுப்புக்குழு உறுப்பினா் குரு குமரன் உள்ளிட்ட நகா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். கம்பம் வடக்கு நகரப் பொறுப்பாளா் துரை நெப்போலியன், தெற்கு நகரப் பொறுப்பாளா் சூா்யா செல்வகுமாா், வாா்டு நிா்வாகிகள், கவுன்சிலா்கள் அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கூடலூா் நகர திமுக சாா்பில் பேருந்து நிலைய வளாகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு நகர செயலாளா் சி.லோகந்துரை மற்றும் நகர, வாா்டு நிா்வாகிகள், கவுன்சிலா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com