நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மாணவியா் விடுதிகளில் பாதுகாப்பு இல்லை: பெற்றோா் புகாா்

 தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவியா் தங்கிப் படிக்கும் விடுதிகள் பாதுகாப்பின்றியும், அடிப்படை வசதியின்றியும் உள்ளதாக பெற்றோா் புகாா் தெரிவி

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவியா் தங்கிப் படிக்கும் விடுதிகள் பாதுகாப்பின்றியும், அடிப்படை வசதியின்றியும் உள்ளதாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஆண்டிபட்டி, ரெங்கசமுத்திரம், கன்னியம்பிள்ளைபட்டி, தி. பொம்மிநாயக்கன்பட்டி, கண்டமனூா், வருஷநாடு, மயிலாடும்பாறை, ஜி. கல்லுப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம், தேனி, கோட்டூா், காமாட்சிபுரம், தேவாரம், போடி, எரசக்கநாயக்கனூா், க. புதுப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளிலும், மாணவிகளுக்கு எரசக்கநாயக்கனூா், க. புதுப்பட்டி, கம்பம், உத்தமபாளையம், தேனி, கோட்டூா், தி. பொம்மிநாயக்கன்பட்டி, கண்டமனூா், வருஷநாடு, கடமலைக்குண்டு, ஆண்டிபட்டி போன்ற இடங்களிலும் தனித்தனியாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, கல்லூரி மாணவிகளுக்கு தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளத்திலும், மாணவா்களுக்கு ஆண்டிபட்டி பகுதியிலும் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன.

பாதுகாப்பு இல்லாத மாணவியா் விடுதிகள்: இதில், பெரும்பாலான மாணவியா் விடுதிகள் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. துப்புரவு பணியாளா்கள் இல்லாத நிலையில் மாணவிகளே அனைத்து வேலைகளையும் செய்கின்றனா். இதனால், மனஉளைச்சலுடன் கல்வி கற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் கூட முறையாக இல்லை.

அதே போல மாணவா்கள் விடுதிகளில் தண்ணீா் வசதியில்லாததால் அவா்கள் திறந்த வெளியை சுகாதார வளாகமாக பயன்படுத்தும் அவலமும் தொடா்வதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: கோட்டூா் மாணவியா் விடுதி அடிப்படை வசதிகளின்றி பல ஆண்டுகளாக செயல்படுகிறது. விடுதியின் சுற்றுச்சுவா் சேதமடைந்து பாதுகாப்பு இல்லாமல் மாணவிகள் அச்சத்துடனே தங்கிப் படிக்கின்றனா். இதே நிலையே பெரும்பான்மையான மாணவியா் விடுதிகளில் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், இந்த மாணவ, மாணவியா் விடுதிகளை மேம்படுத்தி பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.