கம்பத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th November 2022 12:36 PM | Last Updated : 07th November 2022 12:36 PM | அ+அ அ- |

கம்பத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
கம்பத்தில் மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை கூடலூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் த.மனோகரன் தலைமை தாங்கினார், துணைச்செயலாளர் குரு.இளங்கோ முன்னிலை வகித்தார்.
இதையும் படிக்க- 2024 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்ற அணிகள் எவை?
கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தல் 2024 ல் பணியாற்றுவது, வெற்றி வாய்ப்பை பெறுவது, எப்படி என்று மாவட்ட செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் பெ.செல்வேந்திரன், மகாராஜன் எம்எல்ஏ, உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி நகர ஒன்றிய திமுகவினர் கலந்து கொண்டனர்.