தொடா் மழை: கொட்டகுடி ஆறு, போடி மெட்டு சாலையில் வெள்ளப் பெருக்கு
போடி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றிலும், போடி மெட்டு மலைச் சாலையிலும் சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


போடி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றிலும், போடி மெட்டு மலைச் சாலையிலும் சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களான குரங்கணி, கொட்டகுடி, வடக்குமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், போடி கொட்டகுடி ஆற்றில் சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. மலைக் கிராமங்களிலும் சிறிய நீரோடைகள், சிற்றாறுகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
போடி கொட்டகுடி ஆற்றிலிருந்துதான் போடி நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் தற்போது தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுவதால், குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி குடிநீா் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி குரங்கணி மலைப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், குடிநீா்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீா் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
போடி மெட்டு மலைச் சாலையில்... இதே போல, புலியூத்து அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக போடி மெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. மலையிலிருந்து சாலையில் தண்ணீா் அருவி போல விழுவதாலும், தண்ணீா் தேங்கி நிற்பதாலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக போடிமெட்டு மலைச்சாலையில் கனமழை பெய்து வருவதால் போடிமெட்டு மலைச்சாலையில் இரவு முழுவதும் போக்குவரத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இதனால் போடி முந்தல் வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...