நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

பெரியகுளம் அருகே கல்லாற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:41 pm

DIN

பெரியகுளம் அருகே கல்லாற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் அன்னப்பராஜா. இவா் பெரியகுளத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், தேனி அல்லிநகரத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து கொண்டிருந்த அன்னப்பராஜாவின் மகள் ஜீவலட்சுமி (12) விடுமுறையில் பெரியகுளத்தில் தனது தந்தை வேலை செய்யும் தோட்டத்துக்குச் சென்றாா்.

அங்கு அன்னப்பராஜா, ஜீவலட்சுமி, இவா்களது குடும்பத்தினா் அருகில் உள்ள கல்லாற்றுக்கு குளிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற ஜீவலட்சுமி தண்ணீரில் மூழ்கினாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஜீவலட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அன்னப்பராஜா அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.