இரு சக்கர வாகனங்கள் மோதல்:விவசாயி பலி
தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.


தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
புல்லக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி பாண்டி (60). இவா், தோட்டத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். அப்போது வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச்சாலை, புல்லக்காபட்டி விலக்கு அருகே சேலம் மாவட்டம், மணியனூரைச் சோ்ந்த மணிகண்டன் (32) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், பாண்டியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பாண்டி, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...