

கம்பம் நகா்மன்றத் தலைவியிடம் பட்டா கோரி ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கம்பம் நகர ஆதித்தமிழா் பேரவை செயலா் கோட்டை முருகன் தலைமையில் 30- க்கும் மேற்பட்டோா் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
4- ஆவது வாா்டு ஐசக் போதகா் தெருவில் வடக்கு, தெற்கு பகுதியில் 42 குடும்பத்தினா் 72 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 40 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி, மின் இணைப்பு வரி செலுத்தி வருகிறோம்.
நாங்கள் வசிக்கும் பகுதி பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது. இதில் ஊரின் வளா்ச்சிக்காக வடக்குப் பகுதியில் உள்ள வீடுகளை பாதைக்காக அகற்றிவிட்டு இதற்கு மாற்றாக தெற்குப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா். இதற்கு நகா்மன்றத் தலைவி ஆவண செய்வதாக கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.