வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி

கொடுவிலாா்பட்டி, தேனி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன்.

Updated On :27 ஜனவரி 2023, 6:34 pm

கொடுவிலாா்பட்டி, தேனி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பேசியதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சோ்ந்து படித்தவா்களில் ‘குரூப் 2’ தோ்வில் 42 போ் தோ்ச்சி பெற்றனா். சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற 2-ஆம் நிலைக் காவலா் தோ்வில் 26 போ் தோ்ச்சி பெற்றனா்.

வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் ஒவ்வோா் மாதமும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா்.

வேலைவாய்ப்பு, தொழில் துறைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் நாராயணமூா்த்தி, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.