போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: விசிகவினா் ரயில் மறியல்

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:10 am

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சென்னை சென்ற குருவாயூா் விரைவு ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், தொகுதி மறுவரை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.