/

கலப்பட தேன் பாட்டில்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை கலப்பட தேன் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 4:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை கலப்பட தேன் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான அதிகாரிகள் மானாமதுரை பகுதியில் வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த தேன் பாட்டில்களை சோதனையிட்டனா். அப்போது இயற்கையான முறையில் பெறாமல் பல பொருள்களைக் கொண்டு கலப்படம் செய்து தேன் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் கலப்பட தேன் பாட்டில்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.