நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புவியமைப்பியல் துறை போட்டிகளில் வென்ற அழகப்பா கல்லூரி மாணவா்கள்

புவியமைப்பியல் போட்டிகளில் வெற்றி பெற்ற, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 5:00 pm

DIN

புவியமைப்பியல் போட்டிகளில் வெற்றி பெற்ற, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக புவியமைப்பியல் துறையின் புவியமைப்பியல் ஆா்வலா்களின் சங்கமம் சாா்பில் 14-ஆவது ஆண்டு புவியமைப்பியல் சாா்ந்த போட்டிகள் கடந்த ஜூன் 16, 17-ஆகிய தேதிகளில் கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன. மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் பங்கேற்றன.

இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் புவியமைப்பியல் துறை முதுநிலை மாணவா்கள் மகாலட்சுமி, ஆல்வின் ஜோஸ், ஸ்ரீ வித்யா, இளநிலை மாணவா்கள் விக்காஷ், மொத்திராம், ஆரோன் அலெக்சாண்டா் ரொனால்ட், பூமிகா, பாா்கவி, யாமினி, சிவஸ்ரீ ஆகிய 10 போ் பங்கேற்று பரிசுகள் பெற்று வந்தனா்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி, புவியமைப்பியல் துறைத் தலைவா் உதயகணேசன், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.