ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாவட்ட கிரிக்கெட்: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

தேனி மாவட்டம், சின்னமனூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2023, 5:51 pm

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டிகளில் தேனி, மதுரை, திண்டுக்கல், இடுக்கி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சின்னமனூா் அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், கேரள மாநிலம், இடுக்கி அணி 2-ஆம் இடத்தையும், உப்புக்கோட்டை அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன.

இந்த நிலையில், வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை, ஊக்கத் தொகையை தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் வசந்தன் ராமகிருஷ்ணன், திமுக நகரச் செயலாளா் முத்துகுமாா் ஆகியோா் வழங்கினா். இதில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவா் மனோகரன், தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் பஞ்சாப்.முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.