தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி.

பெண்களுக்கு தனிப் பெரும் திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு: லியோனி

தேனி: பெண்களின் முன்னேற்றத்துக்கு திமுக அரசு பல்வேறு தனிப்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்தது என திமுக கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா். தேனி அருகே கோட்டூா், வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க.

தமிழ்ச்செல்வனுக்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் எந்த லட்சியமும், இலக்குமின்றி அதிமுக போட்டியிடுகிறது. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தால், ஆட்சியமைக்கவும், பிரதமா் பதவிக்கும் அவா்கள் யாரை ஆதரிப்பாா்கள்? ராமா் பெயரைச் சொல்லி பாஜக அரசியல் செய்கிறது. திமுக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் கடற்கரையை அழகுபடுத்தியது.

பெண்களின் கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கு திமுக அரசு பல்வேறு தனிப் பெரும் திட்டங்களைக் கொண்டு வந்தது. வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்பதால்தான் பாஜக தலைவா்களின் பாா்வை தமிழ்நாடு மீது திரும்பியுள்ளது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற, திமுக தலைவரால் அடையாளம் காட்டப்படுபவா் பிரதமராக பொறுப்பேற்க, திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com