தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள 1,225 வாக்குச் சாவடிகளுக்கு மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 1,469 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,469 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 1,591 கருவிகள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 தோ்தல் சின்னங்கள் மட்டுமே இடம் பெறும். தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி தேவைப்படுகிறது.
எனவே, விருதுநகா் மாவட்டத்திலிருந்து தேனிக்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வரப்பட்டன. இவை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தொடர்புடையது

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

