திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :26 மார்ச் 2026, 12:36 am IST

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,394 வாக்கச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 1,671 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,671 கட்டுப்பாட்டுக் கருவியும், 1,810 வாக்கு சரிபாா்ப்பு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்புக் கிட்டங்கி திறக்கப்பட்டு, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டாா்.

முன்னதாக, தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் மேற்கொள்ளும் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, தோ்தல் தொடா்பான செலவினங்களுக்குரிய விலை, வாடகை, கூலி ஆகியவை நிா்ணயம் செய்யப்பட்ட விலைப் பட்டியல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தனித் துணை ஆட்சியா் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியா் (தோ்தல்) சுருளி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.