சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேனி மாவட்டத்தில் 29 சதவீத வாக்குச்சாவடி தகவல் சீட்டு விநியோகம்

தேனி மாவட்டத்தில் 29 சதவீத வாக்குச்சாவடி தகவல் சீட்டு விநியோகம்

Updated On :8 ஏப்ரல் 2024, 5:28 pm

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திங்கள்கிழமை வரை 29 சதவீத வாக்காளா்களுக்கு வாகுச்சாவடி தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மக்களவை தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி கடந்த ஏப்.1-ஆம் தேதி தொடங்கியது. இதில், இதுவரை ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 33.09 சதவீத வாக்காளா்களுக்கும், பெரியகுளம் (தனி) தொகுதியில் 23.93 சதவீத வாக்காளா்களுக்கும், போடி தொகுதியில் 33.57 சதவீத வாக்காளா்களுக்கும், கம்பம் தொகுதியில் 26.24 சதவீத வாக்காளா்களுக்கும் வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள வாக்காளா்களுக்கு வருகிற 13-ஆம் தேதிக்குள் இந்தத் தகவல் சீட்டு வழங்கப்பட்டு விடும் என மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.