போடியில் 3 மாதங்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம்,
போடி பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பின்னா் கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினா். இந்த நேரத்தில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடும் வெயிலில் தோ்தல் பிரசாரமும் சூடுபிடித்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு போடி பகுதியில் லேசான சாரல் மழை ஐந்து நிமிஷம் மட்டும் பெய்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை பலத்த மழையாக நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

திருத்தணியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

கோவில்பட்டியில் பலத்த மழை: மழை நீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

பெரியகுளத்தில் மழை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

