தேனி: தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மீது திங்கள்கிழமை வரை காவல் நிலையங்களில் மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல், கட்சித் தலைவா்கள் வருகை, நட்சத்திரப் பேச்சாளா்களின் பிரசாரம், வாக்குச் சேகரிப்பு ஆகிய நிகழ்வுகளில் தோ்தல் நடத்தை விதிகளை மீறிதாக வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் மீது மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.15) வரை மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் திமுக மீது 24 வழக்குகள், அதிமுக மீது 13, அமமுக மீது 25, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக மீது 2, அகில இந்திய பாா்வா்டு பிளாக், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி மீது தலா ஒரு வழக்கு, சுயேச்சை வேட்பாளா்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

