தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கம்பத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

கம்பத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image

கம்பத்தில் அமமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலில் பொதுமக்களுக்கு குளிா்பானங்களை வழங்கிய கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். முத்துச்சாமி. உடன் அமைப்புச் செயலா் ரபீக், நகரச் செயலா் ஆா். மணி உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

கம்பம்/நிலக்கோட்டை: தேனி மாவட்டம், கம்பத்தில் நகர அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு நகரச் செயலா் ஆா்.மணி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் நிா்வாகி ஸ்டாா் ரபீக் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். முத்துச்சாமி பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத், குளிா்பானங்கள், பழங்களை வழங்கினாா்.

நிகழ்வில் சின்னமனூா் நகரச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட வக்கம்பட்டி அருகேயுள்ள கள்ளுக்கடை பிரிவில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் பிள்ளையாா்நத்தம் முருகேசன் தலைமை வகித்தாா்.

ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி முருகேசன் நீா்மோா் பந்தலைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோா், வெள்ளரிக்காய், இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன், மாவட்ட பிரதிநிதி ஆரியநல்லூா் தங்கவேல், முன்னிலைகோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நிக்சன்பால், அரசு ஒப்பந்ததாரா் ஜீசஸ் அகஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.