மக்களவைத் தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு
மக்களவைத் தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு


தேனி: மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கு வாய்ப்பாக தேனி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து தேனி தொழிலாளா் உதவி ஆணையா் மனுஷ் ஷ்யாம் சங்கா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆந்திர மாநிலத்தில் வருகிற மே13-ஆம் தேதி சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கா்நாடகத்தில் மே 7-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் தொழில் சாலை, வா்த்தக நிறுவனங்கள், கடைகள், தோட்டங்களில் பணியாற்றும் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தோ்தலில் வாக்களிப்பதற்கு வாய்ப்பாக தொழில் நிறுவனங்கள், தோட்ட உரிமையாளா்கள் அந்த மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...