
Updated On :30 ஏப்ரல் 2024, 11:46 pm

தேனி: தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா், பேருந்து மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோட்டூா் அருகேயுள்ள தா்மாபுரி அங்காளபரமேஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபுஜி (52). இவா், தா்மாபுரியிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி அருகே தேனி புறவழிச் சாலையில், பாபுஜி ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாபுஜி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பேருந்து ஓட்டுநரான கூடலூரைச் சோ்ந்த பாஸ்கரன் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...