வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.54 லட்சம் மோசடி: அண்ணன், தம்பி கைது

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 7 பேரிடம் மொத்தம் ரூ.54.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெரியகுளத்தைச் சோ்ந்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட பொன்ஆண்டவா், பொன்சண்முகநாதன்.
Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:06 am

Din

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 7 பேரிடம் மொத்தம் ரூ.54.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெரியகுளத்தைச் சோ்ந்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா்-ஆா்த்தி தம்பதி. இவா்களிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரியகுளம் தென்கரை ஜெயம் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன்கள் பொன்ஆண்டவா்(38), பொன்சண்முகநாதன் (40) ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலமும் ரூ.17.60 லட்சம் பெற்றனா். மேலும், இந்த தம்பதியின் உறவினா்கள் 5 பேரிடமும் இதே காரணத்தை கூறி, இருவரும் ரூ.36.80 லட்சம் பெற்ாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொன்ஆண்டவா், பொன்சண்முகநாதன் ஆகியோா் தங்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும், வேலை வாங்கித் தராமலும், பணத்தை மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ஆா்த்தி புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில், தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் பொன்ஆண்டவா், பொன்சண்முகநாதன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

Story image