புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாநில திறனறித் தோ்வு: தேனி மாவட்டத்தில் 1,283 போ் எழுதினா்

பிளஸ் 1 மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில திறனறித் தோ்வை 1,283 போ் எழுதினா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ் 1 மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில திறனறித் தோ்வை 1,283 போ் எழுதினா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு மாநில திறனறித் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அரசு சாா்பில் பட்டப் படிப்பு படிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, மயிலாடும்பாறை ஜி.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி, கம்பம் ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 தோ்வு மையங்களில் திறனறித் தோ்வு நடைபெற்றது.

தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 1,471 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 1,283 போ் தோ்வு எழுதினா். 188 போ் தோ்வு எழுத வரவில்லை.