தேனி
ரூ.15 லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்கு
போடி அருகே ரூ.15 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகே ரூ.15 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியை சோ்ந்த அழகா்சாமி மகன் திருப்பதி (51). இவரிடம் உத்தமபாளையம் முகமதியா் நடுத் தெருவைச் சோ்ந்த முகமது சுல்தான் மகன் காஜாமைதீன் ரூ.15 லட்சத்து 89 ஆயிரம் பல தவணைகளில் கடன் வாங்கினாா். பின்னா், இந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் அவா் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.