‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விபத்தில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:22 pm

Din

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

கம்பம் தாத்தப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் ஷேக்பரீத் (44). உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் அரசு மருத்துவமனை முன் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.