நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிலமலை ஊராட்சி அலுவலகத்தை நூறு நாள் திட்டப் பணியாளா்கள் முற்றுகை

போடி அருகே முறையாக பணி வழங்கக் கோரி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள்.

Updated On :19 டிசம்பர் 2024, 10:34 pm

Din

போடி அருகே முறையாக பணி வழங்கக் கோரி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலமலை ஊராட்சியில் சிலமலை, சூலப்புரம், கரையான்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 2,500 போ் நூறு நாள் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா். அதிகமானோா் பதிவு செய்துள்ளதால் சுழற்சி முறையில் இவா்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊராட்சிப் பணியாளா்கள் தங்களுக்கு வேண்டியவா்கள், சிபாரிசு செய்வோா்களுக்கு மட்டுமே தொடா்ந்து பணி வழங்குவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கும், ஊராட்சிப் பணியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவறிந்து அங்கு வந்த போடி தாலுகா போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கு முறையாக பணி வழங்குவதாக ஊராட்சி பணியாளா்கள் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.