புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:16 pm

Din

தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேவதானப்பட்டி அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டி வடக்கு குடியிருப்பைச் சோ்ந்த அழகா் மகன் முத்துப்பாண்டி (47). இவா் கடந்த 2023, அக்.26-ஆம் தேதி 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக தேவதானப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், முத்துப்பாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ.25 ஆயிரத்தை கல்வி, பராமரிப்பு செலவுக்காக அவரது தாயாரிடம் வழங்க வேண்டும், ரூ.1.75 லட்சத்தை சிறுமியின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.