நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு: தம்பதி மீது வழக்கு

சின்னமனூரில் போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப் பதிவு செய்த தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:35 pm

Din

சின்னமனூரில் போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப் பதிவு செய்த தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியை சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ். இவா் தனது பூா்வீக வீட்டை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்-பாப்பா தம்பதிக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு ஒத்திக்கு கொடுத்துவிட்டு, சென்னை ஆவடியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஜெயக்குமாா்-பாப்பா தம்பதியினா் தனது உறவினா் ஜெயராஜ் பெயரில் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று, போலியாக பத்திரப் பதிவு செய்து, வீட்டை சொந்தமாக்கினா்.

இதுகுறித்து, வீட்டின் உரிமையாளரான சென்னையில் வசிக்கும் ஜெயராஜூக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இணையதளம் மூலம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் அளித்தாா்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் படி, சின்னமனூா் போலீஸாா் ஜெயக்குமாா்-பாப்பா தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.